தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிலம்ப போட்டிகளை முறையாக நடத்த கோரிக்கை

 சிலம்ப போட்டிகளை முறையாக நடத்த கோரிக்கை

 சிலம்ப போட்டிகளை முறையாக நடத்த கோரிக்கை


ADDED : ஜூன் 20, 2026 07:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 07:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் சிலம்ப போட்டிகளை முறையாக நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

கடலுார் சிலம்பம் மேம்பாட்டுச்சங்கம் சார்பில், தமிழ்நாடு சிலம்பம் மேம்பாட்டுச் சங்க நிர்வாகிகள், கடலுார் மாவட்ட சிலம்பம் பயிற்சியாளர்கள், நேற்று கடலுார் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் மகேஷ்குமாரை நேரில் சந்தித்தனர்.

பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் சிலம்பப் போட்டிகளை முறையாக நடத்தவும், அனைவருக்கும் பொதுவான விதிமுறைகளை தெரிவித்து அதன்படி போட்டிகளை நடத்தி திறமையான மாணவர்களை தேர்ந்தெடுக்க கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து தமிழரின் அடையாளம் மற்றும் பாரம்பரிய சிலம்ப கலையை தமிழ்நாடு முழுவதும் உள்ள சிலம்பம் வளர்ச்சிக்காக பாடுபடும் பயிற்சியாளர்களை ஒன்றிணைத்து, பொதுவிதிமுறையை உருவாக்கி, விளை யாட்டுத்துறை அமைச்சர் மற்றும் முதல்வரிடம் பரிந்துரைத்து அரசு விதியாக வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

தமிழ்நாடு சிலம்பம் மேம்பாட்டுச் சங்கத் தலைவர் ஆறுமுகம், துணைத்தலைவர் நாராயணன், ஜெசிந்தா, செயலாளர் அமல் ராஜ், சிறப்பு தலைவர்கள் முத்து மோகன், சிகாமணி, கனகவேல், குமரகுரு மற் றும் நிர்வாகிகள், அசோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us