ADDED : ஆக 21, 2025 09:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; சிதம்பரம் தில்லை நகர் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிதம்பரம் போக்குவரத்து காவல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியை வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனர் வீனஸ் குமார் துவக்கி வைத்தார்.
போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் கலையரசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போக்குவரத்து விதிகள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், சப் இன்ஸ்பெக்டர் தில்லை கோவிந்தராஜ பெருமாள், காவலர்கள் அசோக்குமார், தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை பள்ளி முதல்வர் நரேந்திரன் ஒருங் கிணைத்தார்.