ADDED : அக் 25, 2024 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் சுகாதாரத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் திருஞானம் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.
பள்ளி தாளாளர் முனைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். அறங்காவலர் அன்புமதி பாலசுந்தரம் முன்னிலை வகித்தார்.
துணை முதல்வர் வெற்றிவேல் வரவேற்றார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் மாரிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், உணவு பகுப்பாளர் சரவணன் ஆகியோர் கலப்பட உணவால் ஏற்படும் தீமைகள், பருவகால மாற்ற நோய்களான டெங்கு, சிக்குன் குனியா ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது, தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜா, சித்தார்த்தன், மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
பள்ளி முதல்வர் லிண்டா அலெக்சாண்டர் நன்றி கூறினார்.

