/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
/
அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
ADDED : மார் 25, 2025 06:58 AM
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் கலைமகள் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், கடலூர் மாவட்ட கலால் துறை சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சிதம்பரம் கோட்ட கலால் அலுவலர் ஜெயசெல்வி, தனி வருவாய் ஆய்வாளர் (கலால்) கமல்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டியை துவக்கி வைத்தனர்.
முகாமில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, வாசகங்கள் எழுத்துத் போட்டி ஆகியன நடத்தி, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆசிரியை தேன்மொழி, ஆசிரியர் கமாலுதீன் மற்றும் பலர் பங்கேற்றனர்.