/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முட்லுார் கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்
/
முட்லுார் கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்
ADDED : பிப் 13, 2024 05:42 AM
கிள்ளை: சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரியில் புதுச்சத்திரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் என்.எஸ்.எஸ்., திட்டம் இணைந்து, ஸ்பர்ஸ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை தலைவர் லோகராஜன் முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பிரபா வரவேற்றார். புதுச்சத்திரம் மருத்துவ அலுவலர் மிதிலைராஜன், மருத்துவ மல்லா மேற்பார்வையாளர் கருணாநிதி ஆகியோர் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினர்.
மாணவர்கள் ஸ்பர்ஸ் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் கோவிந்தன் நன்றி கூறினார்.