ADDED : அக் 27, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, துணை இயக்குநர் (தொழுநோய்) சித்திரைச் செல்வி தலைமை தாங்கினார். மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் திருமாவளவன், கல்லுாரி முதல்வர் முனைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் விஜயரங்கன் வரவேற்றார்.
இதில், மாணவ, மாணவிகளுக்கு தொழுநோய் பரவும் விதம், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட நல கல்வியாளர் ஜோசப் குழந்தைராஜ், மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள் அழகேசன், அறவாழி, சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், மதனகோபால், முத்துச்செல்வன், கல்லுாரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

