ADDED : ஜன 21, 2026 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தென்பெண்ணை ஆற்றுத்திருவிழாவில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி தலைமை தாங்கி, ஆற்றுத்திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். முகாமில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரஸ்வதி, குடும்ப நலநீதிமன்ற மாவட்ட நீதிபதி சோபனாதேவி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் தனம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மூத்தஉரிமையியல் நீதிபதி ஜெனித்தா பங்கேற்றனர். முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

