ADDED : ஜன 21, 2026 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: நாட்டுப்புற கலைஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர், திரட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல் மகன் முத்துக்குமரன், 55; நாட்டுப்புற கலைஞர்.இவருக்கு சரஸ்வதி, 48, என்ற மனைவியும், 1 மகன் மற்றும், 1 மகள் உள்ளனர். முத்துக்குமரனுக்கு இதய பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இதய வலி ஏற்பட்டதால் அவர் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு, ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
முத்துகுமரன் கண்கள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

