ADDED : ஏப் 02, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : கிள்ளையில் மீனவர்களுக்கு கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பிச்சாவரம் வனச்சரக அலுவலர் இக்பால் தலைமை தாங்கினார். வனவர் அருள்தாஸ் முன்னிலை வகித்தார்.
வனத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு சென்று கடல் ஆமைகள் குறித்தும், அதை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், வனக்காப்பாளர்கள் ஜெயவரதன், விக்னேஷ்பிரபு, அலெக்சாண்டர், அபிராமி, சரளா, பாலகிருஷ்ணன், முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.