ADDED : ஜூன் 07, 2025 02:59 AM

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி மற்றும் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் எஸ்.பி., ஜெயக்குமார் பேசுகையில், கல்வி, அறிவு, ஒழுக்கம் நிறைந்த சிறந்த மாணவர்களாக உருவாக வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது' என்றார்.
போதை பொருட்கள் பயன்படுத்தமாட்டோம் என மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், உதவி தலைமை ஆசிரியர்கள் விஜயராகவன், பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை கவிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.