ADDED : ஜூன் 13, 2025 03:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு, போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் எஸ்.பி.,ஜெயக்குமார் மாணவ, மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் மொபைல் எண்ணை தரக்கூடாது எனவும் பேசினார்.
தொடர்ந்து, புகையிலை,மது, கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்த மாட்டேன் எனவும்,புத்தக வாசிப்பு திறனை ஏற்படுத்திக் கொள்வேன் என மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.