ADDED : அக் 03, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாண வர்கள் சார்பில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் 1 பாலசுப்ரமணியன், பேரூராட்சி துணைத் தலைவர் குமரவேல், உலக திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் ஞானமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
பெண்ணாடம் லயன்ஸ் கிளப் தலைவர் சக்திவேல், பொருளாளர் பாண்டியன், மாவட்டத் தலைவர்கள் அருள்முருகன், கிருஷ்ண மூர்த்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
முக்கிய வீதிகளின் வழியாக சென்ற ஊர்வலத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் கோஷமிட்டு சென்றனர்.