sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நுாறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஊர்வலம்

/

நுாறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஊர்வலம்

நுாறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஊர்வலம்

நுாறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : நவ 12, 2024 08:14 PM

Google News

ADDED : நவ 12, 2024 08:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுாரில், 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கடலுார் டவுன்ஹால் அருகே துவங்கிய ஊர்வலத்தை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மேற்கொள்ள 29.10.2024 முதல் 28.11.2024 வரை சிறப்பு சுருக்கதிருத்த முகாம்கள் நடக்கிறது. 1.1.2025ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைய உள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ள தகுதியுடையவர்கள் ஆவர். புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய அந்தந்த பகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடமோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ அல்லது நகராட்சி ஆணையர், தாசில்தார், ஆர்.டி.ஓ., மற்றும் சப் கலெக்டர் அலுவலகங்களிலோ பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம். மேலும், https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்கள் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வரும் 16, 17, 23, மற்றும் 24 ஆகிய தேதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இம்முகாம்களில் பொதுமக்கள் தங்களது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான சேவைகளை பெற்று பயனடையலாம் என்றார்.

அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாநகராட்சி கமிஷனர் அனு, கலெக்டர் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், பி.ஆர்.ஓ., நாகராஜ பூபதி, டி.ஆர்.ஓ., அபிநயா, மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி, தேர்தல் தாசில்தார் சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us