ADDED : பிப் 01, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, இந்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் சார்பில் உலக ஈர நிலங்கள் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கடலுாரில் தேசிய பசுமைப்படை சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அரவிந்த்ராஜ் முன்னிலை வகித்தார். இதில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, மாநகராட்சியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, துாய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, தேசிய பசுமைப்படை செல்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.