/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம்
/
சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம்
ADDED : செப் 15, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
அதேகம் பின்னகம் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த கூட்டத்தில், கீரப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் சப் இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி, வட்டார சுகாதார செவிலியர் சரசு, செல்வமணி ஆகியோர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினர். முன்னதாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதமொழி நன்றி கூறினார்.