ADDED : மார் 30, 2025 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : சாத்தமங்கலம் அரசு நடுநிலை பள்ளியில் வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விருத்தாசலம் பகுதியில் தங்கி பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உலக காடுகள் தினத்தையொட்டி, சாத்தமங்கலம் அரசு நடுநிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார். வேளாண் மாணவிகள் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற தலைப்பில் விழிப்பு பேரணி நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, காடு வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.