/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விழிப்புணர்வு உறுதிமொழி: கலெக்டர் அழைப்பு
/
விழிப்புணர்வு உறுதிமொழி: கலெக்டர் அழைப்பு
ADDED : ஆக 10, 2025 02:28 AM
கடலுார் : போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு உறுதிமொழியில் அனைவரும் பங்கேற்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில், போதைப் பொருட்களின் தீய விளைவுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் நாளை 11ம் தேதி போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக மாபெரும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க உள்ளார்.
இதனை முன்னிட்டு கடலுார், கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட உள்ளது. நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ அமைப்புகள், இளைஞர் மன்றங்கள், குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கலாம்.