/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எறும்பூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
எறும்பூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 29, 2025 11:26 PM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவிகளின் உயர்கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல மாணவிகள் அபிநயா, அபர்ணா மற்றும் மாணவிகள் முன்னிலை வகித்தனர்.
வேளாண்புல இறுதியாண்டு மாணவிகள், தற்போது பயின்று வரும் எறும்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவிகள் உயர்கல்வி குறித்தும், நீட் தேர்வு எதிர்கொள்ளவது குறித்தும் விளக்க உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பள்ளி மாணவிகள், வேளாண்புல மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வேளாண்புல மாணவி அபிநயா நன்றி கூறினார்.