/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கனரக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
கனரக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 07, 2025 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் போக்குவரத்து போலீசார் சார்பில், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே உள்ள கனரக வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்துவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்கள் ராமஜெயம், செல்வநாயகம், தலைமை காவலர்கள் சிவக்குமார், விஜய் ஆனந்த் ஆகியோர் அடங்கிய குழுவினர், கனரக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில், வாகனம் ஓட்டும்போது, டிரைவர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும்.
குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது.
லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். சாலைகளில் அதிவேகமாக செல்லக்கூடாது. என கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.