/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 17, 2025 11:32 PM

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாட்டம் குறித்த விழிப்பணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிதம்பரம் தீயைணைப்பு துறை சார்பில், வீனஸ் பள்ளியில், மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதும், தீ விபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், செய்முறையாக செய்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சிக்க வீனஸ் குழும நிறுவனர் வீனஸ் குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் நரேந்திரன் ஆசிரியர் கோகுல் வரவேற்றார். சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிமாறன் மாணவர்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து அறிவுரை வழங்கினார். தீயணைப்பு வீரர் பொன்ராஜ் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து, மாணவர்களை வைத்து பல்வேறு செய்முறைகளை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்வில், தீயணைப்பு வீரர்கள், சக்திவேல், முகமது சல்மான், சதீஷ், லோகேஸ்வரன், ராம் இந்திரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஆசிரியை ஆர்த்தி நன்றி கூறினார்.