/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விழிப்புணர்வு நிகழ்ச்சி: எஸ்.பி., பங்கேற்பு
/
விழிப்புணர்வு நிகழ்ச்சி: எஸ்.பி., பங்கேற்பு
ADDED : மார் 02, 2024 11:15 PM

திட்டக்குடி: திட்டக்குடியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் போலீஸ் எஸ்.பி., ராஜாராம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உங்களைத்தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்டத்தின் கீழ், எஸ்.பி., ராஜாராம், திட்டக்குடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பெண் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
திட்டக்குடி போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.
அப்போது அவர் கூறுகையில், திட்டக்குடியில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க உரிய முன்வரைவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதுவரை போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

