/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விழிப்புணர்வு பேரணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
விழிப்புணர்வு பேரணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : பிப் 09, 2025 06:35 AM

கடலுார்: கடலுாரில் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலைபாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கடலுார் மஞ்சக்குப்பம் டவுன்ஹால் முன்பு துவங்கிய பேரணியை அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணி டவுன்ஹாலில் துவங்கி, திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம் வழியாக டவுன்ஹாலில் முடிவடைந்தது. முன்னதாக அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் டி.எஸ்.பி., ரூபன்குமார், நுாறு பேருக்கு ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்குவரத்து
போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத், ஏ.பி.வி.ஆர்., மோட்டார்ஸ் உரிமையாளர் பரத், சப்இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சிதலைவர் சுதாகர், பிரகாஷ், பாபாஜி அறக்கட்டளை உரிமையாளர் சிவங்கரி மற்றும் போக்குவரத்து போலீசார், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

