
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: குறிஞ்சிப்பாடி அருகே கன்னிதமிழ்நாடு கிராமத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்கள் பங்கேற்ற புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பிரிவு இறுதி யாண்டு மாணவர்கள் கிரா மத்தில் தங்கி பயிற்சி பெற திட்டத்தில் கன்னிதமிழ் நாடு கிராமத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது. வார்டு கவுன்சிலர் லட்சுமி திருஞானசம்பந்தம் தலைமை தாங்கினார்.
பேரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முடிவடைந்தது. மீனாட்சி பேட்டை கிராமத்திலும் பேரணி நடந்தது.