ADDED : ஜூலை 28, 2025 01:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் எடிசன் ஜி.அகோரம் நினைவு பள்ளி சார்பில், போதை ஒழிப்பு மற்றும் காடு வளர்ப்பு ஊக்குவிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பள்ளி தாளாளர் ஷமி தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் முன்னிலை வகித்தார். சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன் பேரணியை துவக்கி வைத்தார்.   போதை ஒழிப்பு மற்றும் காடு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்திச் சென்றனர். பொதுமக்களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

