
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் மேம்படுத் தப்பட்ட அரசு ஆரம்ப சுகா தார நிலையம், ஜெ.பி. கல்வி நிறுவனங்கள் மற்றும் ஜெ.பி. பாரா மெடிக்கல் இன்ஸ்டியூட் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு விழிப்பிணர்வு பேரணி நடந்தது.
பேரணிக்கு டாக்டர் சினேகா தலைமை தாங்கினார். ஜெ.பி. கல்வி நிறுவனங்களின் தாளாளர் பிரகாஷ், ரோட்டரிகிளப் தலைவர் குருராஜன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
இதில் சுகாதாரதுறை அலுவலர்கள் புகையிலை மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். . சுகாதார ஆய்வாளர்கள் ராஜா, தினேஷ் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்துக்கொண்டனர். சுகாதார ஆய்வாளர் அன்பரசன் நன்றி கூறினார்.