ADDED : டிச 11, 2025 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா பள்ளி சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஜெயப்பிரியா பள்ளி குழும தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குநர் தினேஷ் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பள்ளி படிப்பை மறந்து போதையில் பயணிக்கும் மாணவர்களை போதையில் இருந்து காக்கும் விதமாகவும், போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை பள்ளி மாணவர்கள் கையில் ஏந்தியபடி நெய்வேலி பாரதி ஸ்டேடியத்தில் துவங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பள்ளி செயலாளர் சிந்து, முதல்வர் சிதம்பரி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

