/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., நிறுவனம் ஜப்பான் வங்கியுடன் ஒப்பந்தம்
/
என்.எல்.சி., நிறுவனம் ஜப்பான் வங்கியுடன் ஒப்பந்தம்
என்.எல்.சி., நிறுவனம் ஜப்பான் வங்கியுடன் ஒப்பந்தம்
என்.எல்.சி., நிறுவனம் ஜப்பான் வங்கியுடன் ஒப்பந்தம்
ADDED : டிச 11, 2025 06:31 AM

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம், பசுமை எரிசக்தி இலக்குகளை விரைவுப்படுத்த ஜப்பான் வங்கியுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவனம், தனது புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களின் மேம்பாட்டுக்காக, முதல் வெளிநாட்டு வர்த்தக கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஜப்பானை சேர்ந்த சுமிடோமோ மிட்சுயி வங்கி கழகத்திடம் இருந்து, ஜப்பானிய யென் 15.464 பில்லியன் (100 மில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான நீண்ட கால கடனை பெறுவதற்கான இந்த ஒப்பந்தம் கடந்த 8ம் தேதி இறுதி செய்யப்பட்டது. இந்த குறைந்த வட்டியிலான நிதியுதவி, என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் உள்ள லாப வரம்பை மேம்படுத்த உதவும். இத்தொகை, என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துணை நிறுவனமான என்.எல்.சி., இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் மூலதனச் செலவுகளுக்காக மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்படும். இது, என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் லட்சியமிக்க பெருநிறுவனத் திட்டம் 2030 உடன் ஒத்துப்போகிறது.இத்திட்டத்தின் இலக்கு 2030ம் ஆண்டுக்குள் 10 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனை அடைவது மற்றும் நிறுவனத்தின் மின் உற்பத்தி பிரிவில் பசுமை பங்கை 50 சதவீதமாக உயர்த்துவது ஆகும். மேலும், 2070ம் ஆண்டுக்குள் இந்தியாவின் நிகர பூஜ்ஜிய இலக்குகளை ஆதரிக்கும் வகையிலும் அமையும்.பசுமை கடன் ஒப்பந்தமானது என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் (நிதி) தனபால், எஸ்.எம்.பி.சி.,-கிப்ட் சிட்டியின் கிளைத் தலைவர் மனோஜ் கவுசிக் ஆகியோருக்கிடையே என்.எல்.சி.ஐ.எல்.,யின் நிதித்துறை இயக்குநர் பிரசன்னகுமார் ஆச்சார்யா முன்னிலையில் கையெழுத்தானது.

