ADDED : ஜன 10, 2026 06:06 AM

பண்ருட்டி: பண்ருட்டியில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில் மத்திய நீர்சக்தி அமைச்சகம் மற்றும் பிரம்மாகுமாரிகள் ஈஸ்வர்ய ஆன்மிக இயக்கம் இணைந்து, நிலத்தடி நீர் சேமிப்புக்கான விழிப்புணர்வு பிரசார கருத்தரங்கம் நடத்தியது.
கல்லுாரி புல முதல்வர் முத்துகுமரன் தலைமை தாங்கினார். பிரம்மா குமாரிகள் முருகன் முன்னிலை வகித்தார்.
ரேவதி, ராஜ்குமார், குப்புசாமி, நிர்மலா, முருகானந்தம், ராமலிங்கம் ஆகியோர் நீர் சேமிப்பு, துாய்மை குறித்து பேசினர். தொடர்ந்து, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
முன்னதாக, என்.எஸ். எஸ். அலுவலர் மாலா வர வேற்றார். பிரம்மா குமாரிகள் விழுப்புரம் இயக்க பொறுப்பாளர் அம்புஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

