ADDED : மார் 22, 2025 07:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் இருந்து ஈரோட்டிற்கு சரக்கு ரயில் மூலம் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
மாவட்டத்தில் சம்பா அறுவடையின்போது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன.
இவற்றில் இருந்து 50 ஆயிரம் நெல் மூட்டைகள், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் ஈரோடுக்கு நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டன.
ஈரோடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் சேமிக்கப்பட்டு, அங்குள்ள அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு, பொது வினியோகத் திட்டம் வாயிலாக ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளன.