/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலுத்தங்கரை வாய்க்கால் துார்வார கோரிக்கை
/
பாலுத்தங்கரை வாய்க்கால் துார்வார கோரிக்கை
ADDED : செப் 19, 2024 11:34 PM

புவனகிரி: புவனகிரி ஒன்றியம், பாலுத்தாங்கரை விரகடி விளாகம் வாய்க்காலை துார் வாரக்கோரி, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
புவனகிரி ஒன்றியம், லால்புரம் ஊராட்சி பாலுத்தாங்கரை பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் விரகடி விளாகம் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் துார்ந்து கிடப்பதால் அப்பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சம்பா மகசூலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடை மடை பகுதிக்கு இதுவரை தண்ணீர் வராததால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்னர்.
மேலும், விரகடி விளாக வாய்க்கால் துார்ந்து புதற்மண்டி உள்ளதால் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வாய்க்காலை துார் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் சேகர், அப்பகுதி விவசாய சங்க பிரமுகர்கள் கருணாநிதி, அய்யாசாமி, சேகர், கோபிநாத், கணேசன், சித்தானந்தன் ஆகியோர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.