/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ம.க., செயல்வீரர்கள் கலந்துரையாடல்
/
பா.ம.க., செயல்வீரர்கள் கலந்துரையாடல்
ADDED : ஜன 26, 2024 12:16 AM

விருத்தாசலம் : விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதி பா.ம.க., வாக்குச்சாவடி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விருத்தாசலத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பா.ம.க., தலைவர் அன்பு மணி ஆலோசனை வழங்கினார்.
சொத்து பாதுகாப்புக் குழு தலைவர் கோவிந்தசாமி, வன்னியர் சங்க செயலாளர் அய்யா சாமி, மகளிர் சங்க செயலாளர்கள் தமிழரசி ஆதிமூலம், சிலம்புச்செல்வி, மாவட்ட செயலாளர்கள் முத்துக்கிருஷ்ணன், மகேஷ், முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் திருஞானம், மாவட்ட தலை வர் கருணாநிதி, மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜூ, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் சிங்காரவேல், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், விருத்தாசலம் ஒன்றிய துணை சேர்மன் பூங்கோதை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

