ADDED : பிப் 16, 2025 03:10 AM

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேட் பாங்க் முன், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய வங்கி ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் செயலாளர் நெப்போலியன் தலைமை தாங்கினார்.வங்கி ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் திருமலை, முருகன், லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.
ஓய்வூதியர் சங்க செயலாளர் ரமணி துவக்க உரையாற்றினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின்மாவட்ட தலைவர் மீரா, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அதிகாரிகள் சங்கத்தின் சார்பில்கார்த்திகேயன், மண்டல செயலாளர் குருகாந்தி, மாவட்ட சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ஸ்ரீதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.