ADDED : நவ 12, 2024 08:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட வங்கி ஊழியர் சங்கத் தலைவர் மீரா தலைமை தாங்கினார்.அவைத் தலைவர் முருகேசன்,ஓய்வுதியர் சங்கத் தலைவர்கள் திருமலை, ரமணி, தாலுகா சங்கத் தலைவர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.பொதுச் செயலாளர் யயாதி ராவ் கண்டன உரையாற்றினார்.முன்னாள் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் விளக்கவுரை ஆற்றினார். தனியார் வங்கி நிர்வாகத்தின் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கலைவாணன் நன்றி கூறினார்.