/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 15, 2025 11:16 PM

கடலுார்: கடலுார் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மீரா தலைமை தாங்கினார். வங்கி ஓய்வூதியர் சங்க நிர்வாகி திருமலை முன்னிலை வகித்தார். கடலுார் தாலுகா சங்க தலைவர் லட்சுமணன், மாவட்ட சங்க உதவிசெயலாளர் கலைவாணன், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அனைத்து தனியார் வங்கிகளையும் நாட்டுடைமையாக்க வேண்டும், தனியார் வங்கிகளில் வருமான வரிப்பிடித்தம் இல்லாத பென்ஷன் நிதியை உருவாக்க வேண்டும், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வ ங்கி ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்த வேண்டும், நைனிடால் வங்கியை விற்காமல் பரோடா வங்கியுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.