/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம்
/
பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம்
ADDED : மார் 14, 2024 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
சேர்மன் கருணாநிதி தலைமை தாங்கினார். துணை சேர்மன் மோகனசுந்தரம், பி.டி.ஓ., ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இதுவரை செய்யப்பட்ட பணிகள், செலவினங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வளர்ச்சி பணிகள் செய்ய 15 வது நிதிக்குழு மற்றும் பொது நிதியில் இருந்து அனைத்து கவுன்சிலர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்ஜினியர் கிருஷ்ணகுமார் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். துணை பி.டி.ஓ., நித்யா நன்றி கூறினார்.

