/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
/
கோவில் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
ADDED : நவ 04, 2025 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு:  சின்னநரிமேடு பிரகன்நாயகி சமேத தென்கங்காபுரீஸ்வரர் கோவில் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடந்தது.
பண்ருட்டி அடுத்த சின்ன நரிமேடு கிராமத்தில் பழமையான பிரகன்நாயகி சமேத தென்கங்காபுரீஸ்வரர் கோவில் உள்ளது. பழுதடைந்த நிலையில் உள்ள கோவிலை புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இதனையொட்டி கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.
யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலயம் சுற்றி வந்து கலச அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

