ADDED : ஜூலை 29, 2025 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீவக்காரமாரி பகுதியில் எம்.பி., தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் பூமி பூஜையை துவக்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன், நகர செயலாளர் செல்வகுமார், துணை தலைவர் முத்தமிழரசி பார்த்திபன், வி.சி., கட்சி மாவட்ட செயலாளர் மணவாளன், ஒன்றிய செயலாளர் ரவி, தொகுதி பொறுப்பாளர் வெ ற்றிவேந்தன், காங்., மாவட்ட துணை தலைவர் தமிழ்வாணன், வார்டு கவுன்சிலர்கள் சதீஷ்குமார், வசந்தி ரவி, பன்னீர்செல்ம், ஷாஜகான், இளைஞரணி வீரவேல் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.