/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ADDED : ஜன 20, 2024 06:17 AM

புவனகிரி பாலக்கரையில் நடந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் செஞ்சிலட்சுமி, ஒன்றிய செயலாளர் சீனிவாசன், துணைச்சேர்மன் வாசுதேவன், மாவட்ட மாணவரணி வீரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை சிலைகளுக்கும் ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் தங்கமணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சங்கர், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், கவுன்சிலர் லதாராஜேந்திரன், தொழில்நுட்ப பிரிவு ஜெயராஜ், கூட்டுறவு வங்கித் தலைவர் சசி செல்வராஜ், மனோகர் முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், மாணவரணி சிவஞானம், பேச்சாளர் வேலு, கட்சி நிர்வாகிகள் பாண்டுரங்கன், சந்திரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.