/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட அளவிலான போட்டி புவனகிரி மாணவிகள் தேர்வு
/
மாவட்ட அளவிலான போட்டி புவனகிரி மாணவிகள் தேர்வு
ADDED : ஆக 21, 2025 07:54 AM

புவனகிரி: புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (மேற்கு) மாணவியர்கள் இருவர் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
புவனகிரி குறுவட்டம் மற்றும் மைய அளவிலான சதுரங்க போட்டி சேத்தியாத்தோப்பு எஸ்.டி.சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், சிலம்பப்போட்டி சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல் நிலைப்பள்ளியிலும் நடந்தது.
இதில் குறுவட்டங்களை சேர்ந்த தனியார், அரசு உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
இதில் புவனகிரி (மேற்கு) அரசு நடுநிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் புவனசுந்தர் பயிற்சியின் பேரில், 5 ம் வகுப்பு மாணவி அஷ்வதா சதுரங்கப்போட்டியிலும், எட்டாம் வகுப்பு மாணவி ஷாலினி சிலம்ப போட்டியிலும் வெற்றி பெற்றனர்.
இருவரும் மாவட்ட அளவில் வேப்பூர் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
இரு மாணவியர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர் ஆகியோரை, தலைமை ஆசிரியர் சத்தியநாராயணன், கல்விமேலாண்மைக்குழுத் தலைவி ஷர்மிளா உள்ளிட்ட குழுவினர் பாராட்டினர்.