/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிதி நிறுவன ஊழியரின் பைக் திருட்டு
/
நிதி நிறுவன ஊழியரின் பைக் திருட்டு
ADDED : ஜூலை 05, 2025 03:18 AM
திட்டக்குடி: திட்டக்குடி அருகே நிதி நிறுவன ஊழியரின் பைக், மொபைல் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திட்டக்குடி அடுத்த மருதத்துார், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 29; திட்டக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஆவினங்குடி அருகே உள்ள வேம்புடையார் கோவிலில் உடல் அசதி காரணமாக துாங்கினார்.
இரவு 7:00 மணிக்கு எழுந்து பார்த்த போது தனது பைக் மற்றும் பைக்கின் டேங்க் கவரில் வைத்திருந்த மொபைல் போன் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.