ADDED : டிச 20, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரியில் பல்வேறு இடங்களில் பைக் திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான நபரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் புவனகிரியில் பல்வேறு பகுதியில் பைக் திருடியதை ஒப்புக்கொண்டார். அவர் புவனகிரி ஆதிவராகநத்தம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் 30; என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, அய்யப்பனை கைது செய்து, மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர்.