
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வைடிபாக்கத்தை சேர்ந்தவர் முரளி. இவர், இ.ஐ.டி.,பாரி சர்க்கரை ஆலை அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது காணவில்லை. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை சர்க்கரை ஆலை பகுதியில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்ததில் அவர் பைக் திருடன் என்பதும், ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது. அவர், பண்ருட்டி அருகே கொட்டிகோணாங்குப்பத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராஜதுரை,36; என, கூறினார்.
அதையடுத்து போலீசார் ராஜதுரையை கைது செய்து, அவர் கொடுத்த தகவலில் பல்வேறு இடங்களில் திருடிய 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

