தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பைக் திருடியவர் கைது

பைக் திருடியவர் கைது

பைக் திருடியவர் கைது


ADDED : செப் 16, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

விருத்தாசலம் அந்தோணியார் நகரை சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பிரதிஷ்குமார்,22. இவர் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் – கடலுார் சாலையில் உள்ள டீ கடை முன் தனது பல்சர் பைக்கை நிறுத்தி விட்டு, அந்த கடையில் பெயிண்டிங் வேலை செய்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அவரது பைக்கை திருடிச் சென்றார். இதைப்பார்த்த பிரதிஷ்குமார் மற்றும் சிலர் அந்த மர்மநபரை மடக்கி பிடித்து, விருத்தாசலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர், மாணிக்கவாசகர் நகரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் மணிகண்டன், 24. என்பது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us