ADDED : நவ 15, 2024 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று மதியம் மழை பெய்தபோது, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் அருகே இருந்த வேப்பமரம் மரம் வேறோடு சாய்ந்தது.
அப்போது, மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைக்குகள் சேதமடைந்தது. மரத்தின் கீழ், நின்றிருந்த நபர், உள்ளே சிக்கினார்.
அவரை அங்கிருந்த என்.சி.சி., அலுவலக ஊழியர்கள் காப்பாற்றினர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.