/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., செயற்குழுவில் இருதரப்பு வாக்குவாதம்
/
தி.மு.க., செயற்குழுவில் இருதரப்பு வாக்குவாதம்
ADDED : மே 27, 2025 11:14 PM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகர தி.மு.க., செயற்குழுவில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
நெல்லிக்குப்பம் தி.மு.க.,நகர செயலாளராக மணிவண்ணன். தலைமை பொதுக்குழு உறுப்பினராக ராதாகிருஷ்ணன் உள்ளார். இவரது மனைவி ஜெயந்தி நகராட்சி சேர்மனாக உள்ளார். மணிவண்ணன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் இரண்டு கோஷ்டிகளாக செயல்படுகின்றனர்.
சேர்மன் ஆதரவாளர்கள் ஒட்டும் விளம்பர போஸ்டர்களில் நகர செயலாளர் மணிவண்ணன் படம் இடம் பெறுவதில்லை. கட்சி அலுவலகத்தில் வைத்துள்ள பேனரில் நகர நிர்வாகிகள் படங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளன.
அதில் சேர்மன் ஜெயந்தி படம் இடம் பெறவில்லை. நேற்று முன்தினம் கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் நகர செயலாளர் மணிவண்ணன், சேர்மன் ஜெயந்தி மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய சேர்மன் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் வைத்துள்ள பேனரில் சேர்மன் படம் இல்லை என கோபமாக பேசினர். இதற்கு பதிலளித்த மணிவண்ணன் ஆதரவாளர்கள் நகர செயலாளர் படத்தையே போடாமல் விளம்பரம் செய்வது நியாயமா என கேட்டதால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் சமாதானம் ஆகவே கூட்டம் அமைதியாக நடந்தது.