/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள்
/
தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள்
தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள்
தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள்
ADDED : பிப் 26, 2024 05:58 AM

வடலுார்: கடலூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நெய்வேலி டவுன் ஷிப்பில், மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நெய்வேலியில் புதியதாக அமைக்கப்பட்ட ஜெயலலிதா சிலைக்கு, சொரத்துார் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன், மாவட்ட பேரவை செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர் , தொழிற்சங்க இணைச் செயலாளர் சூரியமூர்த்தி, பேராசிரியர் வேல்முருகன், மாநில பேரவை துணைச் செயலாளர் பக்தரட்சன், வடலூர் நகர செயலாளர் பாபு, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராதாகிருஷ்ணன், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க தலைவர் வெற்றிவேல், பொருளாளர் தேவானந்தம், அலுவலக செயலாளர் ஜோதி,
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி திருமலைவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

