/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., விவசாய அணி சந்திப்பு நிகழ்ச்சி
/
பா.ஜ., விவசாய அணி சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : பிப் 17, 2024 11:49 PM
வடலூர்: குறிஞ்சிப்பாடி அருகே வடக்குமேலுார் கிராமத்தில் பா.ஜ., கடலுார் கிழக்கு மாவட்ட விவசாய அணி சார்பில், கிராமம் தோறும் விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பா.ஜ., மாவட்ட விவசாய அணி தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாபு, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் பச்சையப்பன், விவசாய அணி ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தனர்.
விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாநில செயலாளர் வெங்கடாசலம், கூட்டுறவு பிரிவு செயலாளர் செந்தாமரைக்கண்ணன், மாநில இளைஞரணி செயலாளர் ரமேஷ், பண்ருட்டி ஒன்றிய தலைவர் திருமலைவாசன், நிர்வாகிகள் ராமதாஸ், பச்சையப்பன், பழனிவேல், ராஜ்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.