sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 திட்டக்குடியில் போட்டியிட பா.ஜ., அ.தி.மு.க., ஆர்வம்

/

 திட்டக்குடியில் போட்டியிட பா.ஜ., அ.தி.மு.க., ஆர்வம்

 திட்டக்குடியில் போட்டியிட பா.ஜ., அ.தி.மு.க., ஆர்வம்

 திட்டக்குடியில் போட்டியிட பா.ஜ., அ.தி.மு.க., ஆர்வம்


ADDED : மார் 01, 2026 04:49 AM

Google News

ADDED : மார் 01, 2026 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-நமது நிருபர்-: கடலுார் மாவட்டத்தில், திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் (தனி) ஆகிய ஒன்பது சட்டசபை தொகுதிகள் உள்ளன.

அதில் திட்டக்குடி தொகுதியில் கடந்த, 2021 சட்டபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் கணேசன் 83,726 ஓட்டுகள் பெற்று பா.ஜ., வேட்பாளர் தடா பெரியசாமியை 21,563 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

அதேபோல அவர் கடந்த, 2016 சட்டசபை தேர்தலில் 65,139 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க., வேட்பாளர் அய்யாசாமியை 2,212 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தற்போது அமைச்சராக உள்ள கணேசனை எதிர்த்து தே.ஜ., கூட்டணியில் யார் போட்டியிடுவது என பா.ஜ., அ.தி.மு.க., இடையே கடும்போட்டி நிலவுகிறது.

அ.தி.மு.க.,வினர் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றதால் தாங்களே மீண்டும் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர்.

மேலும் அ.தி.மு.க., தலைமையும் அமைச்சர்களுக்கு எதிராக அ.தி.மு.க., வேட்பாளரே போட்டியிட வேண்டும் என முடிவு செய்துள்ளதால் திட்டக்குடி தொகுதியில் அ.தி.மு.க., களம் காண்பது உறுதி என்கின்றனர்.

கடந்த, 2011 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., வில், களமிறங்கி வெற்றி பெற்ற தமிழழகன், தற்போது, பா.ஜ., மாவட்டத்தலைவராக உள்ளார். அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என, அக்கட்சித்தலைமையை கேட்டுவருகிறார்.

இதனால் நிச்சயமாக தங்களுக்கு தொகுதி கிடைக்கும் என பா.ஜ., நிர்வாகிகள் நம்பிக்கையோடு உள்ளனர். இருதரப்பினரும் தொகுதியைக் கைப்பற்றுவதில் மும்முரமாக உள்ளனர்.






      Dinamalar
      Follow us