ADDED : பிப் 15, 2024 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் பா.ஜ., கடலுார் லோக்சபா தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கடலுார் தொகுதி பொருப்பாளர் சாய் சுரேஷ் தலைமை தாங்கினார். கடலுார் மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுகுமாறன், எழிலரசன், சரவணசுந்தரம், தாமரை மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத் தலைவர் சம்பத் கலந்து கொண்டு, தேர்தல் பணி குறித்து பேசினார். கூட்டத்தில் லோக்சபா தொகுதிக்குட்பட்ட கட்சியின் பொருப்பாளர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். நடுவை பரதன் நன்றி கூறினார்.

