/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., நிர்வாகிக்கு சேவை செம்மல் விருது
/
பா.ஜ., நிர்வாகிக்கு சேவை செம்மல் விருது
ADDED : ஜன 04, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை; கடலூர் அடுத்த ஆண்டார்முள்ளிபள்ளத்தை சேர்ந்தவர் இந்தியன் துரை ராமலிங்கம். பா.ஜ., கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் மற்றும் தமிழக கனரக லாரி உரிமையாளர் சங்க துணைத் தலைவராக உள்ளார்.
இவரின் சமூக சேவையை பாராட்டி, கோயம்புத்தூர் கோ இந்தியா அரங்கில் நடந்த விழாவில், கோல்டன் எண்டர்டெயின்மென்ட் சார்பில், இந்தியன் துரை ராமலிங்கத்திற்கு, சேவை செம்மல் விருதை நடிகர்கள் செந்தில், வையாபுரி ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
சேவை செம்மல் விருது பெற்ற இந்தியன் துரை ராமலிங்கத்திற்கு, பா.ஜ., நிர்வாகிகள், வாழ்த்து தெரிவித்தனர்.

